Header Ads

  • சற்று முன்

    குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட புதிய பேருந்துதினை கடம்பூர்.செ.ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார்.


    தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட புதிய பேருந்துதினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், புதிய பேருந்தினை இயக்கும் துவக்க விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில், தூத்துக்குடி பணிமனையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  கலந்து கொண்டு, குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட புதிய பேருந்துதினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    பின்னர்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் கடைகோடியில் உள்ள மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்று அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்,  110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார், அதோபோல், ஒவ்வொரு துறையின் மானிய கோரிக்கையின் போது, அந்தந்த துறை அமைச்சர்கள் பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்nபுறும் வகையில் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு, பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில்,  தமிழக முதல்வர் , போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், ரூ.134 கோடியே 53 இலட்சம் மதிப்பீட்டிலான 515 புதிய பேருந்துகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.. அதனை தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த அமைச்சர்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகள் தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலும், நேற்று முன் தினம் 15 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டது. 

    மேலும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 100 பேருந்துகள் சுமார் ரூ.40.36 கோடி செலவில் இயக்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக, 40 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில். இரண்டு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தினசரி இரவு 8 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கும், அதேபோல் இரவு 8 மணிக்கு சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும் இயங்கும். இதில், பயணிகளின் பாதுகாப்பிற்காக எமர்ஜென்சி கதவு, தானியங்கி கதவுகள் ஒவ்வொரு இருக்கையிலும் செல் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் முக்கிய ஊர்களுக்கு பேருந்து செல்லும்போது, அறிவிப்பு மூலம் பயணிகளுக்கு தெரியப்படுத்தும் வசதி. ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த மிதவை பேருந்துக்கு பதிலாக. இயக்கப்படுவதால் ஏற்கெனவே கிடைத்த வறுவாயைவிட கூடுதலாக ரூ.13,850ஃ- தினசரி கிடைக்கும். மேலும், தூத்துக்குடி பணிமனை மூலம் நாள் ஒன்றிக்கு 66 பேருந்துகள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கும் சுமார் 40,854 கி.மீ தூரம் இயக்கப்படுவதால் ரூ.17.35 இலட்சம் தினசரி வசூல் ஈட்டப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில், ஒரு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்து இயக்கப்பட்டுள்ளது.

     மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டார், அவர்; வழியில் செயல்படும்,  தமிழகமுதல்வர் , அதற்கான பணியினை தொடங்கி வைத்து, தற்போது பணிகள்  நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு மின் உற்பத்தி 13 ஆயிரத்து 510  மெகாவாட் தேவைப்படுகிறது. தற்போது 15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மின்மிகை மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ளது.    எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் பயனடையும் வகையில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பேருந்து வசதியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அல்பி ஜாண் வர்க்கீஸ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் திரு.மணி, வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், துணை மேலாளர் (வணிகம்) சுப்பிரமணியன், அரசு விரைவு  போக்குவரத்துக்கழக பிரிவு மேலாளர் அபிமன்யு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முக்கிய பிரமுகர்கள் சின்னத்துரை, சேவியர், அமிர்தகணேசன், பிச்சையா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad