Header Ads

  • சற்று முன்

    பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உதவி பேரரசிரியர்கள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீவுடன் சந்திப்பு


    தமிழகம் முழுவதிலும் செயல்பட்டு வரும் 41 பல்லைகழக உறுப்புக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படுவதாக தற்போது நடைபெற்ற வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தொகுப்புதிய உதவி பேரரசிரியர்கள் சங்கத்தினை சேர்ந்த பேராசிரியர்கள் முனியசாமி, குருசித்ரசண்முகபாரதி, செண்பகராஜ், சம்பத்குமார் ஆகியோர் கடம்பூர் பரம்புக்கோட்டையில் உள்ள தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ இல்லத்தி சந்தித்தனர். உறுப்புக்கல்லூரிகளை அரசு கல்லூரியாக மாற்றியதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கு நன்றி தெரிவித்தது மட்டுமின்றி, உறுப்புக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் தகுதியுள்ள தொகுப்புதிய உதவி பேரரசிரியர்களின் பணியை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  முதல்வரிடம் உதவி பேராசிரியர்களின் கோரிக்கை குறித்து எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்வதாக அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad