Header Ads

  • சற்று முன்

    லாரிகள் வேலை நிறுத்தத்தால் தீ பெட்டி தொழில் முடங்கும் அபாயம்


    நாடுமுழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்தம் கடந்த 20ந்தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



    கடந்த 7 நாள்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிரதான தொழில் தீப்பெட்டி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் உற்பத்தி செய்யப்படும் 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்து வருவது மட்டுமின்றி, தீப்பெட்டி மற்றும் அதனை சேர்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டு சுமார் 100 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருளான மெழுகு,குச்சி, குளோரேட், சல்பர், கேசின், பாஸ்பரஸ் உள்ளிட்டவை வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தான் கொண்டுவரப்படுகிறது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மூலப்பொருள்கள் வந்து சேருவதில் தடை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டு இருந்த மூலப்பொருள்களை கொண்டு தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், மேலும் உற்பத்திய செய்ய மூலப்பொருள்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அதிகரித்து வருவதால், உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்  ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் லாரி வேலை நிறுத்தம் குறித்தும், தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம், மூலப்பொருள்கள் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம், சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அதுல்ஜெயின், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் ராஜவேல், செயலாளர் கதிரவன், துணை தலைவர் ராஜீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் ஒரு புறம் இருக்க, தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள்கள் வரத்து தடை ஏற்பட்டுள்ளதால்; தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளுக்கு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நாளை முதல் வேலைநிறுத்தம் காரணமாக   4லட்சம் தொழிலாளர்கள்  நேரடியாகவும் மறைமுகமாகவும் இதில் 90 சதவீதம் பெண்கள்  பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அரசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு லாரிகள் வேலை நிறுத்ததினை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad