Header Ads

  • சற்று முன்

    ரத்து ரத்து சிபிஐ தீர்ப்பு ரத்து செய்தது உயர் நீதிமன்றம்


    சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    தயாநிதிமாறன் கடந்த 2004 - 2007 வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சன் தொலைக்காட்சிக்கு சென்னை பிஎஸ்என்எல்லின் அதிவேக தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக கடந்த 2013 ஆம் ஆண்டு சிபிஐ சார்பில் வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், சன் குழுமத்தின் கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் இருந்து கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி, குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் 4 பேர் மட்டுமே தங்களை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் சிபிஐ நீதிமன்றம் 7 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தது தவறானது என முறையிடப்பட்டிருந்தது. சிபிஐ தரப்பு வாதத்தை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் சிபிஐ நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சிபிஐ மேல்முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்ற கலாநிதிமாறன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

    சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட அவர், இவர்கள் 7 பேரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வழக்கை சந்திக்க வேண்டும் எனவும் ஆணையிட்டார். சிபிஐ நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து சாட்சி விசாரணையைத் தொடங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad