Header Ads

  • சற்று முன்

    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் முன்னேறிவருகிறது - ஸ்டாலின்


    தி.மு.க. தலைவர் கருணாநிதி விரைவில் உடல் தேறிவருகிறார். விரைவில்  அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

     தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். தேவையான உதவிகளைச் செய்ய அவர்கள் அளித்த உறுதிமொழிக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. தலைவருக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விரைவில் உடல் நலம் தேறி  அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் என நம்புவதாகவும் கூறியுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த ராகுல்காந்தி, சீதாரம் எச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின் அனைவரின் அக்கறையும் வாழ்த்துக்களும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை விரைவில் உடல் நலம் மீண்டு வரச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். 

    இதனிடையே தி.மு.க. தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற 50-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்  பொதுவாழ்வில் 80 ஆண்டுகள் முரசொலி நிறுவனராக பவளவிழா, கலைத்துறையில் 70 ஆண்டுகள், சட்டமன்றப் பணிகளில் வைரவிழா, தி.மு.க. தலைவராக பொன்விழா என சோதனைகளை சாதனைகளாக்கி அரைநூற்றாண்டு கால அரசியலின் அசைக்க முடியாத சக்தியான தலைவரின் புகழை போற்றி பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    காட்டாறுகள், துரோகங்கள், நெருக்கடிகள் அதிசயிக்கத் தக்க வெற்றிகள், அதலபாதாளத்தில் தள்ளிய தோல்விகளைக் கடந்து இணையில்லா சாதனை புரிந்த தலைவர் வழியில் என்றைக்கும் பயணிப்போம் என்றும் கூறியுள்ளார்.

    இதனிடையே கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் காய்ச்சல் குறைந்து வருவதாக குறிப்பிட்டார். இவ்வாறு ஸ்டாலின் தனது  டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad