Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க மற்றும் புதிய தமிழகம், கட்சியினர் போராட்டம்


    கோவில்பட்டி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி; மாலையம்மன் கோவில் எதிர்புறம் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி புதிய தமிழகம் கட்சியினரும், போராட்டத்தில் ஈடுபட்டன.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மார்க்கெட் அருகேயுள்ள மாலையம்மன் கோவில் எதிர்புறம் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் புதியதாக திறக்கவுள்ள கடையை முற்றுக்கையிட்டு கடையின் முன்பு முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார், கலால் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். கடை வேறு பகுதிக்கு மாற்றப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டனர். இதை போன்று மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் பெண்கள் மார்க்கெட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் மது அருந்தி விட்டு, அந்த வழியாக செல்லும் பெண்களை அவதூறாக பேசி வருவதாகவும், மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லமுடியாத நிலை உள்ளதால் அந்த டாஸ்மாக் கடையினை அகற்ற கோரி புதிய தமிழகம் கட்சியினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அன்புராஜ் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad