• சற்று முன்

    கோவில்பட்டியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


    கோவில்பட்டியில்பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது



    தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துவரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுனர்கள் சங்கம் சார்பிலும் உரிமையாளர்கள் சார்பிலும் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் நிலை உள்ளது. இருந்தபோதிலும் ஆட்டோக்கள் மூலமாக பொருட்களை குனியவும் செய்யலாம் என்று நினைத்த நிலையில் டீசல் விலை உயர்வு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் உயர்த்த கூடிய சூழ்நிலை உள்ளதாகவும் இன்சூரன்ஸ் அதிகரித்து உள்ளதால் ஆட்டோ ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இனிவரும் காலங்களிலாவது பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி கயத்தாறு கழுகுமலை எட்டையாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டன

    watch nms today youtube Chennal

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad