Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு கண் மருத்துவ முகாம் : ஆட்சியர் துவக்கி வைத்தார்


    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாறுகண் மற்றும் கண் இசை கீழிறங்குதல் நோய்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.

    தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாறுகண் மற்றும் கண் இசை கீழிறங்குதல் இவற்றிற்கான பொது சுகாதாரத்துறை மற்றும் கண் மருத்துவத்துறை இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து பரிசோதனை செய்யப்படுவதை பார்வையிட்டார்.

    பின்னர், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம், தூத்துக்குடி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்களில் நோயாளிகளுக்கு, சிறந்த முறையில் மருத்துவரின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. வழங்கப்படுகிறது. இன்று துவக்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு மருத்துவ முகாமில், மாறுகண் மற்றும் கண் இசை கீழிறங்குதல் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்கள் நடைபெறும்.

    தமிழகத்தில் முதல் முறையாக நமது மாவட்டத்தில் தான் மாறுகண் நோய்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் இம்முகாமிற்கு அழைத்து வந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். மாறுகண் மற்றும் கண் இசை கீழிறங்குதல், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் மாறுகண் மற்றும் கண் இசை கீழிறங்குதல் நோய்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், அனைத்து வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இந்தியாவில் சராசரியாக 407 மில்லியன் குழந்தைகள் 16 வயதிற்கு கீழ் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் ஆகும். பார்வை இழப்பினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்த நாடுகளை காட்டிலும் 5 மடங்கு அதிகமாக உள்ளது. சராசரியாக 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பு குணப்படுத்தக் கூடியது. மீதி உள்ள குழந்தைகளுக்கு ஒரளவு குறைந்த பார்வை கிடைக்கச் செய்யலாம். ஏளைழைn 2020ல் பார்வைக்கு உரிமை என்ற இலக்கினை நோக்கி பயணிக்கிறொம். குழந்தைகள் கண் பார்வை இழப்பு இந்தியாவில் சராசரியாக 1000 மக்களுக்கு 0.8 சதவீதம் அதில் 16.3 சதவீதம் முதல் 37 சதவீதம் வரையிலான பார்வை இழப்பு தடுக்கக் கூடியது. இந்தியாவில் சராசரியாக 2 முதல் 5 சதவீதம் வரை தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மாறுகண் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. தூத்துக்குடியில் சுமார் அதில் 2000 குழந்தைகள் மாறுகண் நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் பற்றி சிறார் நலத்திட்டம் மூலம் இவர்களைக் கண்டறிந்து சரியான சிகிச்சை அளித்து பார்வை இழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் மாறுகண் மற்றும் கண் இசை கீழிறங்குதல் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றிட, பாதிக்கப்பட்டவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசினார்.

    இம்முகாமில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) எம்.ராமசுப்பிரமணியன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி, (காசம்) சுந்தரலிங்கம், மாநகர நல அலுவலர் வினோத்ராஜா, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம். திட்ட மேலாளர் குமாரசுவாமி, மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலர் மரியசேவியர் விமோனிஷ் மற்றும் மருத்துவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்

    செய்தியாளர் : கோவில்பட்டி அ. சிவராமலிங்கம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad