Header Ads

  • சற்று முன்

    12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பாலியில் வன்கொடுமை ஈடுபட்டால் ஆயுள் தண்டனை


    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    காஷ்மீரில் கத்துவா மாவட்டத்திலும், வேறு சில மாநிலங்களிலும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக திருத்த மசோதாவை மக்களவையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார்.

    மசோதா மீது, நேற்று விவாதம் நடைபெற்றபின் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது . பின்னர் இந்தச் சட்டத்திருத்தம் குறித்து கிரண் ரிஜிஜூ விளக்கமளித்தார். அதன்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால்  குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் முதல் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அல்லது அதிகபட்சம் மரண தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

    12 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் கும்பலாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு  20 ஆண்டுகள் முதல் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை கும்பலாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யும் வழக்கில் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad