Header Ads

  • சற்று முன்

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.54.55 லட்சம் மதிப்பிலான கடன் உதவி : ஆட்சியர் வழங்கினார்



    தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 14 கூட்டுக் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் 4 நபர்களுக்கு ரூ.54.55 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், கருணை அடிப்படையில் 1 நபருக்கு பணி நியமன ஆணையினையும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் திருசந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொது மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



    பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தாமிரபரணி ஆற்றில் 1300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 12ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட வாழைப் பயிர்களுக்கு தண்ணீர் கிடைத்து, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 320 சிறு, சிறு குளங்கள் தூர்வாரப்பட்டு 3,20,000 கனஅடி வண்டல் மண் அள்ளப்பட்டுள்ளது. 38 குளங்கள் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பிவிட்டது. 

    ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 95 சதவீத இரசாயணப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனை முழுமையாக அகற்றும் பணி மேலும் 30 நாட்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் சீல் வைக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்கவுள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது. தவறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் 415 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மிண் இணைப்பு, குடிநீர் இணைப்பு தேவைபடுவோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலம் என தெரிவித்தார். 

    மேலும், தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் UYEGP வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வி.சுகுமார் என்பவருக்கு சென்டரிங் தொழில் புரிய ரூ.1 இலட்சம் கடன் உதவியும்.ஜி.மாரீஸ்வரி என்பவருக்கு ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழில் துவங்க ரூ.3 இலட்சம் கடன் உதவியும், (NEEDS) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏ.பிரேமலதா என்பவருக்கு டிஜிட்டல் போர்டுகள் வாடகைக்கு விடுதல் தொழில் புரிய ரூ.15 லட்சத்து 30 ஆயிரத்துக்கான கடன் உதவியும், சுனாமிக்குப் பின் வாழ்வாதார திட்டத்தின் கீழ் அரசடி ஊராட்சியில் உள்ள 14 கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு, மீன் மற்றும் நண்டு வலை பின்னுதல் தொழில் புரிய தலா ரூ.2.50 இலட்சம் என மொத்தம் ரூ.35.00 இலட்சம் வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.

    தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து பணியிடைக்காலமான சி.மரிய தமிழ்ச்செல்வி மகன் ஜி.ஷியாம் என்பவருக்கு கருணை அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, வளர்ச்சிப்பிரிவு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி நியமன செய்து. அதற்கான ஆணையினையும், நோயாளர் நல நிதியின் கீழ் சோமசுந்தரி என்பவருக்கு ரூ.25.000/-க்கான உதவித்தொகை என மொத்தம் 14 கூட்டுக் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் 4 நபர்களுக்கு ரூ.54.55 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் கருணை அடிப்படையில் 1 நபருக்கு பணி நியமன ஆணையினையும் ஆட்சியர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி அனு சமூக பாதுகாப்புதிட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கண்ணன், திட்ட மேலாளர் ஸ்வர்ணலதா, துணை ஆட்சியர் (பயிற்சி) முத்து மாதவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad