• சற்று முன்

    உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, எல்லா தேர்தலும் ஒன்றாக வரட்டும் - புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி


    உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, எல்லா தேர்தலும் ஒன்றாக வரட்டும் என்றும், துணை முதல்வர் ஓ.பி.எஸ் மக்களின் பிரதிநிதி அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலாசீத்தராமன் சந்திக்க மறுத்தது, ஏற்புடையதல்ல என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகி ராஜசேகரன் என்பவரை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்திற்கு மத்தியரசு ஒதுக்கிய நிதியில் ஊழல் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் இருக்க வேண்டும், பொத்தம் பொதுவாக ஊழல் குற்றச்சாட்டு கூற கூடாது, 2 ஜீ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் அதனை நிருபிக்க முடியவில்லை, மத்தியரசு எதற்காக நிதி ஒதுக்கியது, அதில் எதில் ஊழல் நடைபெற்றது , எப்படி நடைபெற்றது என்பது குறித்து ஆதரத்துடன் தெரிவிக்க வேண்டும் , துணை முதல்வர் தமிழக மக்களின் பிரதிநிதி, ஓ.பி.எஸ் தமிழக முதல்வராக இருந்தவர், அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் பார்க்க மறுத்தது வருந்தக்கூடிய விஷயம், தமிழக மக்களை பிரநிதிகளை அமைச்சர் செய்து இருக்க கூடாது செய்து இருந்தால் ஏற்புடையதல்ல.ஆசிரியர் தகுதி தேர்வு என்பது இன்றும் நன்கு வடிகட்ட வேண்டும் ஒருமுறை இரு முறை அல்ல நான்கு முறை வடிகட்டி எடுத்தால் தான்   சரியாக இருக்கும் தமிழகத்தின் கல்வி தரம் தாழ்ந்து போய்விட்டது அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் தான் தேவை, தமிழக அரசு உயர்த்தி உள்ள சொத்து வரியை உடனே திரும்ப பெற வேண்டும், தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவதற்கு முன்பு இது பற்றி மக்களிடம் விளக்க வேண்டும் என்னவேன்றே தெரியாத திட்டத்தை கொண்டு வருகிறோம் என கூறி விட்டு கிடப்பில் போடா கூடாது,உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, எல்லா தேர்தலும் ஒன்றாக வரட்டும் என்று வேண்டும் என்றார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad