Header Ads

  • சற்று முன்

    ஸ்டெர்லைட் கலவரத்திற்கு வைகோ போன்ற தலைவர்கள் தான் காரணம் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ குற்றச்சாட்டு


    ஸ்டெர்லைட் கலவரத்திற்கு வைகோ போன்ற தலைவர் சுற்றுபயணம் மேற் கொண்டு தவறான தகவலை கொடுத்தது தான் காரணம் என்றும், வைகோ பொறுப்புள்ள தலைவராக நடந்து கொள்ள வேண்டும், அரசு நிர்வாகதில் ஐ.டி.ரெய்டு நடைபெறவில்லை, இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும், தேர்தலை கண்டு அதிமுக பின்வாங்கியதும் கிடையாது,   பயந்ததும் கிடையாது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்ட நேருயுவ கேந்திரா, கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் - மாரியம்மாள் கல்லூரி மற்றும் சுவாமி விவேகானந்த யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் 4வது சர்வதேச யோகா தினம் மற்றும் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் கருத்தரங்கம் எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் - மாரியம்மாள் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ கலந்து கொண்டு யோகாவில் பல்வேறு சாதனைகள் படைத்தவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினர். விழாவில் கல்லூரி மாணவிகள் பல்வேறு யோகா ஆசனங்களை செய்து காண்பித்து அசத்தினர். இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசுகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுவதை வேடிக்கையாக எடுத்துக்கொள்வதா, கோலிகூத்தாக எடுத்துக்கொள்வதா, ஏளனமான எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்ட போது, அது செல்லாது என்று கூறினார். அரசாணையில்  செல்லும் அரசாணை, செல்லாத அரசாணை எதுவும் இல்லை என்று கூறினேன், அரசாணை தெளிவாக வெளியிட்டதன் காரணமாகதான் நேற்று மத்தியரசு கட்டுப்பாட்டியில் உள்ள  பசுமை தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்த போதும்,  தமிழக அரசு எடுத்த முடிவு செல்லுபடியாகும், ஸ்டெர்லைட் ஆலை திறக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.இதனை வைகோ பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசுகிறார். போராட்டம் தொடங்கிய போது, மாசுகட்டுப்பாட்டு உரிமத்தினை புதுப்பிக்கமால் ஆலை மூடப்பட்டது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. செய்திதாள்களில் விளம்பரமும் கொடுத்தோம், மூடிய ஆலைக்கு போராட வேண்டாம், மக்கள் தங்களை வருத்தி கொள்ள வேண்டாம் என்று மாவட்ட அமைச்சர் என்ற முறையில் நானும் மாவட்ட நிர்வாகமும் வலியுறுத்தினோம், ஆனால் வைகோ போன்ற தலைவர்கள் எல்லாம் சுற்றுபயணம் மேற்கொண்டு தேவையற்ற பீதியை மக்களிடையே கிளப்பி சம்பவத்திற்கு காரணமே அவரை போன்ற அரசியல் வாதிகள் தான், மக்கள் போராட்டத்தினை கைவிட்ட இருந்த நிலையில் தவறான தகவலை கொண்டு சேர்த்து இப்படிப்பட்ட நிலைக்கு இழுத்துச்சென்றனர். 


    இது குறித்து மீனவ மக்களே தெரிவித்துள்ளனர். மனு கொடுக்க சென்ற எங்களை தவறான வழிக்கு சிலர் இழுத்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். பொறுப்புள்ள தலைவர்கள் இது போன்ற தவறான தகவலை சொல்லமாட்டார்கள், வைகோ பொறுப்பான தலைவராக நடந்து கொள்ள வேண்டும், அரசு நிர்வாகதில் ஐ.டி.ரெய்டு நடைபெறவில்லை, ஐ.டி.ரெய்டு இந்தியா முழுவது நடைபெறுவது வழக்கம், இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை, உள்ளாட்சி தேர்தல் நடைபெறமால் போனதற்கு காரணம் திமுக தான், அதிமுக வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் திமுக நீதிமன்றம் சென்ற காரணத்தினால் தேர்தல் நடைபெறவில், வார்டுகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.அது முடிந்ததும் தேர்தல் நடைபெறும், கூட்டுறவு தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.தேர்தலை கண்டு அதிமுக பின்வாங்கியதும் கிடையாது, பயந்ததும் கிடையாது என்றார்.


    பேட்டி : அமைச்சர் கடம்பூர்செ.ராஜீ

    watch nms today chennal

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad