Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் பெண் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்


    கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு மந்திதோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜா, இவர் டூவிலர் மெக்கனிக் ஓர்க் ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நிர்மலாதோவி(24). இவர்களுக்கு 5வயதில் சேஷாத்ரி என்ற மகன் உள்ளான். நேற்று காலை ராஜா வேலைக்கு சென்று விட்டார், சேஷாத்ரி பள்ளி சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிர்மலாதேவி,  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


    இது குறித்து தகவல் கிடைத்தும் மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்து கொண்ட நிர்மலாதேவிக்கு சேஷாத்திரி என்ற மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு எதுவும் காரணமா ? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நிர்மலாதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டு இருக்கலாம் என்றும், எனவே நிர்மலாதேவி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி நிர்மலாதேவி உறவினர்கள், சி.பி.எம். நகர செயலாளர் முருகன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமாயில் மற்றும் நிர்வாகிகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்தும், கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு விடப்பட்டுள்ளதாகவும், அதில் கிடைக்கும் அறிக்கை வைத்து தவறு யார் செய்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad