கோவில்பட்டியில் புதிய தமிழக கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் முன்பு புதிய தமிழக கட்சியினர் இம்மானுவேல் சேகரனுக்கு அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசவிடுதலைக்காக பாடுபட்ட இமானுவேல் சேகரனார் வாழ்க்கை வரலாற்றினை பள்ளி பாடபுத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும், மேலும் மதுரை விமானநிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் முன்பு கவன ஈர்ப்பு புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட செயலாளர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்;ப்பாட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கருத்துகள் இல்லை