கோவில்பட்டி அருகே அரசு உதவி பெறும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளியிருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைபள்ளியல் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் பாலமுருகனை மீண்டும் பணி அமர்த்த கோரியும் அப்பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் உள்ளியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலமுருகன். இவருக்கும் , பள்ளி நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பாலமுருகன் கடந்த மாதம் பணிநீக்கம் செய்யபட்டதாக தெரிகிறது. மேலும் பாலமுருகன் தன்னை பணி செய்யவிடமால் தடுத்தாக எட்டயுபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதே போன்று பள்ளி நிர்வாகமும் பாலமுருகன் முறைகேடுகள் செய்துள்ளதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பு புகார்களையும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கழிப்படவசதி, நூலகம், லேப் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அவற்றை செய்து தர வேண்டும்,
பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் பாலமுருகனை மீண்டும் நியமனம் செய்ய வேண்டும், அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் உள்ளியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பள்ளிமாணவர்களுடன் கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன், எட்டயபுரம் தாசில்தார் வதனாள், பள்ளி செயலாளர் ராமகுமார் ராஜா, கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை