Header Ads

  • சற்று முன்

    ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடி.வி. தினகரன் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீ ச்சு


    சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அ.ம.மு.க .நிறுவனருமான டிடிவி. தினகரன் இல்லத்தில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.


    சென்னை அடையாறு அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் TN 21 BB 7337 கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஓட்டுனரும், புகை பட கலைஞரும் தீ காயங்களுடன் உயிர் தப்பினர்.


    கடந்த சில தினங்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டம் செறிந்த புல்லட் பரிமளம் என்பவரை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை டிடிவி தினகரன் இல்லத்தில் கோஷங்கள் எழுப்பி இறுதியாக நின்று கொண்டிருந்த கார் மீது கற்களையும் பெட்ரோல் குண்டு வீசியதால் கார் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம் என்று துணை ஆணையர் செஷங் சாய் தெரவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad