விதிமுறைகளை மீறி மணல் அள்ளியவர்களின் ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
கோவில்பட்டி அருகேயுள்ள அருணாசலபுரம் கண்மாயில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, விதிமுறைகளை மீறி ஆற்று மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் எதிர;ப்பு தெரிவித்ததை தொடர;ந்து, மணல் அள்ளிய 2 ஜே.சி.பி. இயந்திரங்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்;. தூத்துக்குடி மாவட்;டம் கோவில்பட்டி அருகேயுள்ள அருணாசலபுரம் கண்மாயில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க தோமலைப்பட்டியை சேர;ந்த குருநாதன் என்பவர் எட்டயபுரம் தாலூகா அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அனுமதியை
வைத்து கொண்டு கடந்த சில தினங்களாக ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு மண் எடுத்து வந்துள்ளனர். அருணாசலபுரம் கண்மாய் ஒரு பகுதி தூத்துக்குடி மாவட்டத்திலும், மற்றொரு பகுதி விருதுநகர் மாவட்ட எல்லையிலும் உள்ளன. இந்நிலையில் வண்டல் மண் என்ற பெயரில் விதிமுறைகளை மீறி ஆற்று மணலை அள்ளி செல்லுவதாகவும், தூத்துக்குடி மாவட்ட பகுதிக்கு அனுமதி வாங்கி, விருதுநகர் மாவட்ட பகுதியில் மணல் அள்ளுவதாக கூறி சிந்துவம்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சாத்ததூர் வட்டாட்சியர் சாந்தி தலைமையிலான வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 2 ஜே.சி.பி. இயந்திரங்களை பறிமுதல் செய்து சாத்தூர் தாலூகா காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்..
இதனை தொடர்ந்து ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல் செய்யபட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி ஆற்று மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி சில தினங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்பது தான் தெரியவந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
சற்று நேரத்தில் வீடியோபதிவை பார்க்க nms today youtube channel பார்க்கவும்
சற்று நேரத்தில் வீடியோபதிவை பார்க்க nms today youtube channel பார்க்கவும்
கருத்துகள் இல்லை