கோவில்பட்டி அருகே ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு கிராமத்தினை சேர்ந்த கண்ணன் மற்றும் நிர்மலாதேவி இருவரும் தனித்தனியே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை மேற்கு காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு கணேஸ் நகரைச் சேர்ந்த வேம்புராஜ் - பிரேமா தம்பதியின் மகன் கண்ணன். டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு கண்ணன் தாய் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் கிடைத்தும் மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று மந்திதோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜா, என்பவரது மனைவி நிர்மலாதேவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் கிடைத்தும் மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்து கொண்ட நிர்மலாதேவிக்கு சேஷாத்திரி என்ற மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு எதுவும் காரணமா ? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளி 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை