Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள்விழா கலை இலக்கியப் போட்டி : அமைச்சர் பரிசுகளை வழங்கினார்



    தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 116வது பிறந்த நாள் விழாவில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.

    தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் காமராஜரின் 116ஆவது பிறந்த தின விழாவினை முன்னிட்டு தென்தமிழக கல்லூரிகளுக்கிடையேயான கலை, இலக்கியப் போட்டிகளும், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கலை, இலக்கியப் போட்டிகளும், கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வருகின்றது. பள்ளி மாணவ, மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, மற்றும் பரதநாட்டியப் போட்டியும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் நாட்டுப்புறக்குழு நடனப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. 

    போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசுகளை தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார். முன்னதாக அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச்சிலைக்கு, மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு (9.7.2018 முதல் 13.7.2018 வரை) நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பரதநாட்டியம், நடனம், ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 24 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    பின்னர், அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ விழாப்பேருரையில் தெரிவித்ததாவது: கல்விக்கு கண்திறந்து, ஏழை மாணவர்களின் பசி பிணியை போக்கிடும் வகையில் மதிய உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, ஏழை, எளிய மக்களின் நண்பனாக வாழ்ந்து மறைந்தவர் பெருந்தலைவர் காமராஜர். பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பெருமை சேர்த்திடும் வகையில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட காலத்தில், சென்னையில் உள்ள காமராஜர் இல்லத்தினை, காமராஜர் நினைவு இல்லமாக மாற்றி, அரசே அதனை பராமரிக்கப்பட்டு வருகிறது. 

    மேலும், மதுரை பல்கலைகழகத்தினை மதுரை காமராஜர் பல்கலைகழகமாக பெயர் மாற்றி, பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பெருமை ஏற்படுத்தி தந்தார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். . 1986ம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது அந்த மாவட்டத்திற்கு காமராஜர் மாவட்டம் என பெயர் வைத்தார். புரட்சித்தலைவி அம்மா பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த இல்லத்தினை புதுப்பிக்க ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்கப்பட்டது. மேலும், அம்மா, 2014ம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமாரஜர் நினைவு இடத்தினை ரூ.54 இலட்சம் செலவில் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அமிர்த கணேசன், சேகர், முருகன், காமராஜ் கல்லூரி முதல்வர் து.நாகராஜன், இணை இயக்குநர் (கல்லூரி கல்வியியல்) பாண்டியம்மாள், தாவரவியல் துறைத்தலைவர் ப.செந்தூர்பாண்டி, வணிகவியல் துறைத்தலைவர் கு.காசிராஜன், உதவி இயக்குநர் மயிலம்மாள், சக்திவேல், முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad