கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறை - கோவில்பட்டி நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஒட்டநத்தம் கிராமத்தில் கடந்த 2012ம் ஆண்டு அங்குள்ள பத்திரகாளியம்மன், செல்லியம்மன், காளியம்மன் கோவில்களின் உண்டியல்களை உடைத்து திருட முயன்ற புளியம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவருக்கு கோவில்பட்டி குற்றவியில் நீதிமன்றம் எண் - 1 நீதிபதி சங்கர் 2 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூ. 2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் முருகன்.இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் வசித்து வருகிறார். கடந்த 2012 மணியாச்சி காவல் நிலையத்திற்குட்பட்ட ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன், செல்லியம்மன், காளியம்மன் கோவில்களின் உண்டியல்களை உடைத்து முருகன் திருட முயன்ற போது பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.இந்த வழக்கு கோவில்பட்டி குற்றவியில் நீதிமன்றம் எண் - 1ல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி சங்கர் இந்த வழக்கில் தீர்ப்பு வழக்கினார். சோதப்படுத்தியது மற்றும் திருட முயன்றது வழக்கு பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூ 2000 அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் 4வார சிறைத்தண்டணை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை