Header Ads

  • சற்று முன்

    பணியிடம் நிரப்புவதில் இரு சமூகத்தினர் மோதல் ..... மாணவர்கள் கல்வி பாதிப்பு ...


    கோவில்பட்டி அடுத்துள்ள புதூர் அருகே காலிப்பணியிடம் நிரப்புவதில் ஏற்பட்ட பிரச்சினையால் 8 நாட்களாக கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள புதூர் அருகே உள்ளது. சின்னவ நாயக்கன்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் கல்வி கற்பதற்காக ஒரு சமுதாயத்துக்கு உட்பட்ட ( இந்து நாடார் உறவின்முறை சங்கத்துக்கு உட்பட்ட இந்து நாடார் ஆரம்பப்பள்ளி) ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு இந்த கிராமத்தை சேர்ந்த 126 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் காலியான ஒரு ஆசிரியர் பணியிடம் நிரப்புவதில் பள்ளி நிர்வாகத்திற்கும் மற்றொரு சமூகத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. 
    தங்களது சமூகத்தினை சேர்ந்த குழந்தைகள் அதிகம் படித்த காரணத்தினால் தங்கள் சமூகத்தினை சேர்ந்தவரையும், தாங்கள் குறிப்படும் நபரை தான் ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் பள்ளி நிர்வாகம் சட்டப்படியே ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்று கூறியதால் இரு தரப்பு இடையே மோதல் உருவானது.இந்நிலையில் கடந்த 9-ம் தேதி முதல் ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளி அனுப்ப மறுத்து வருகின்றனர். இதனால் பள்ளியில் 12 மாணவ, மாணவியரே உள்ளனர் இதுதொடர்பாக கிராமத்துக்கு நேரில் சென்றும், தனது அலுவலகத்திலும் என 3 முறைக்கு மேல் விளாத்திகுளம் வட்டாட்சியர் கே.லெனின் பேச்சுவார;த்தை நடத்தினார். மேலும், கடந்த 12-ம் தேதி கோவில்பட்டியில் கோட்டாட்சியர்  ஜே.விஜயா தலைமையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இவை
    அனைத்திலும், நாங்கள் ஊரில் சென்று, ஆலோசித்து பதில் அளிக்கிறோம் என்று கூறி செல்லும் கிராம மக்கள்ரூபவ் அதன் பின்னரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர;.இதனால், பள்ளிக்கு 114 மாணவர் மாணவியர; வரவில்லை. இதனால் பள்ளியே வெறிச்சோடி காணப்படுகிறது. 73 ஆண்டுகளாக சிறப்பாகவும், சுற்றுவட்டாரத்தில் சிறந்த கல்வி தரத்துடன் நடைபெற்று வந்த இந்த பள்ளியில் சாதி ரீதியிலான, அரசு விதிமுறைகளை மீறி ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையினால் 112 பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது மட்டுமின்றிரூபவ் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்களிடம் கருத்து கேட்ட போது,ஊர் பஞ்சாயத்து முடிவு என்று கூறி நம்மிடம் பேச மறுத்து விட்டனர்.
    பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிம் கேட்ட போது பல ஆண்டுகளாக எவ்வித பிரச்சினையும் இல்லை சிறந்த முறையில் சுற்று வட்டாரத்தில் சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு எளிய கல்வி முறை, அனைத்து வசதிகள் என்று செய்து கொடுத்துள்ளது மட்டுமின்றி, இப்பள்ளியின் தரத்தினை நடுநிலைப்பள்ளியாக மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆனால் விதிமுறைகளை மீறி ஆசிரியரை நியமிக்க சொல்லி வற்புறுத்துவது மட்டுமின்றி பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பமால் இருப்பது, மிகுந்த வருத்ததை அளிப்பதாகவும், அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறுகின்றனர். இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, நியமான கோரிக்கைகளை நிறைவேற்றலாம் ஆனால் விதிமுறைகளை மீறி நியமனம் செய்ய வற்புறுத்துவதும், அதற்காக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பதும், தடுப்பதும் சட்டப்படி குற்றம் என்றும், தொடர்ந்து இது போன்று செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad