Header Ads

  • சற்று முன்

    கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவது குறித்து திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.



    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவது குறித்து திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    தமிழக அளவில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டறிந்து நீதி மன்றம் மூலமாக கோயில் நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள சென்னை திரு தொண்டர்கள் சபை நிறுவனரும்,தலைவருமான ராதாகிருஷ்ணன் இன்று ஒசூரில் ஆய்வு மேற்கொண்டார். ஒசூர் காமராஜர் காலனியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில்  , வசந்த் நகரில் உள்ள நிலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்பு ஒசூர் பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நகை (ஜி ஆர் டி ) கடை சார்பில் காளிகாம்பாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகை எடுத்து வாகன நிறுத்தத்திற்கு பயன் படுத்தி வரும் நிலத்தினையும் ஆய்வு மேற்கொண்டார்.



    ஆய்வின் போது தனியார் நகை கடை நிறுவனம் கடந்த மார்ச் மாதம் குத்தகை முடிந்த நிலையில் மாத வாடகை ரூ1.90 லட்சம் வீதம் 3 மாதங்களாக
    ரூ 5.70 லட்சம் வாடகை செலுத்தாமல் உள்ளது கண்டறியப்பட்டது. பின்பு தனியார் நகை கடை மேலாளரிடம் வாக்கு மூலம் பெற்றார்.
    பின்னர் நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில் 
    சென்னை திருத்தொண்டர்கள் சபையின் மூலம் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்து மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒசூர் பகுதியில் இது 4 ம் கட்ட ஆய்வாகும். ஒசூரில் சுமார் 2000 ஏக்கருக்கும் மேலான கோயில்கள் நிலங்கள் உள்ளன.தமிழகம் முழுவதும் 2 லட்சம் ஏக்கருக்கும் மேலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்டு அதன் மூலமாக வரும் வருவாயில் தமிழக அரசின் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றலாம். அந்த அளிவிற்கு கோயில் வருமானம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இங்கு தனியார் நகைக்கடை நிறுவனம் கோயில் நிலத்தை குத்தகை முடிந்த பிறகும் அதை புதுப்பிக்காமல் கடந்த 3 மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளது. இது குறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார், ஆய்வு பணியின் போது ஓசூர் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad