Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் - தூத்துக்குடி, ராமாநாதபுரம் மாவட்ட ஜோடி மாடுகள் முதலிடம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் பூசனூரில் செல்வ விநயாகர், காளியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு 2 பிரிவுகளின் கீழ்நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் 36 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இதில் தூத்துக்குடி, ராமாநாதபுரம் மாவட்ட ஜோடி மாடுகள் முதலிடம் பெற்றன.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் பூசனூரில் இருக்கும் ஸ்ரீ செல்வ விநயாகர், காளியம்மன் கோவில், ஸ்ரீ தேவி, ஸ்ரீபூமாதேவி சமேத பூர்ண வெங்கடேஸபெருமாள் கோவில் திருவிழாவினை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என்று 2 பிரிவுகளில் நடைபெற்ற இந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து 36ஜோடி மாடுகள் பங்கேற்றன. 12 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் 15ஜோடி மாடுகள் பங்கேற்றன.இதில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் கருணாகர ராஜா மாட்டு வண்டி முதல் இடத்தினையும், ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த அப்துல்காதர் மாட்டு வண்டி 2வது இடத்தினையும், பூசனூர் பிர்த்;திஷா மாட்டு வண்டி 3வது இடத்தினை பிடித்தன. 8 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த அப்துல்காதர் மாட்டு வண்டி முதல் இடத்தினையும், சிங்கிலபட்டி சங்குசாமி மாட்டு வண்டி 2வது இடத்தினையும், மேலதட்டப்பாறை அய்யனார் மாட்டு வண்டி 3வது இடத்தினையும் பெற்றன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகள் உரிமையாளர்கள், வண்டிகளை ஒட்டிய சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad