Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி ஸ்ரீலிங்கமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா முன்னிட்டு பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்



    தூத்துக்குடி மாவட்டம்; கோவில்பட்டி இனாம்மணியாச்சி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீலிங்கமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா முன்னிட்டு கொடைவிழா மற்றும்  பூக்குழி இறந்குதல் மிகச்சிறப்புடையதாக இருக்கும் இந்தாண்டிற்கான ஆடித்திருவிழா முன்னிட்டு கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து ஓவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாக்களில் முக்கிய நாளான  இன்று காலை 6மணி முதல் ஸ்ரீப்ரத்யங்கீர், ருத்ர யாகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இரவு 3 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் வாணவேடிக்கை  மற்றும்  மேளத்தாளம் முழங்க கணேசனசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கி பக்தர்கள் தாங்களது நேத்திக்கடனை செலுத்தினர்.;. இதை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்துடன் சாமகால பூஜைகள்  சிறப்புடன் நடைபெற்றது. பூஜையின் போது 100க்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பக்தர்கள் அருள் வந்து சாமியடியது கோயிலுக்கு வந்த  பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad