Header Ads

  • சற்று முன்

    மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் 6 வழி வட்ட சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு


    ஒசூர் பகுதிகளில் மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் 6 வழி வட்ட சாலை அமைக்க விவசாயிகளிடம் கருத்து கேட்பு , விவசாயிகள் கடும் எதிர்ப்பு , உரிய விளக்கம் தரவில்லை என விவசாயிகள் புகார்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் தேன்கனிக்கோட்டை 6வழி வட்டசாலை நில எடுப்பு தொடர்பாக பொதுமக்கள் விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. மத்திய அரசு, அனைத்து சாலைகளும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இயக்கும் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின்படி,
    பெங்களூர் வட்டசாலை, தேசியநெடுஞ்சாலை 948A,உடன் இனைக்கும் திட்டமாக ஓசூர்-தேன்கனிக்கோட்டை வட்டசாலை அமைய உள்ளது, பொதுமக்கள்,நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்காமலேயே நிலப் அளந்து குறிப்பு கற்க்கள் நடப்பட்டுள்ளதால், நேற்று தனி சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ் பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துக் கேட்ட பிறகே பணிகளை மேற்க்கொள்ள வேண்டுமென கிருஷ்ணகிரி  மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் கோரிக்கை மனு அளித்தார்,


    அதன்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் இன்று 6வழிச்சாலை அமைக்க நிலம் எடுக்கும் பணியாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில், கோட்டாட்சியர் (பொறுப்பு) சார் ஆட்சியர் விமல் ராஜ் முன்னிலையில்  நில எடுப்பு வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள்
    சாத்தனூர், பெத்தமதகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, கலுக்கொண்டப்பள்ளி, ஒச புரம், குந்துமாரனப்பள்ளி, பைரமங்கலம், உள்ளிட்ட ஊராட்சிகளின் வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தவும், கருத்துக்கேட்கவும் சென்ற அதிகாரிகளுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்  அரசு எவ்வித அறிவிப்புமின்றி தங்களுடைய நிலங்களை அளவு செய்து மைல்கற்களை நட்டுள்ளதாகவும், சிலர் அரசு வழங்கும் நிவாரணதொகையை விட தற்போது விற்பனையாகும் தனியார் விலையில் இரண்டு மடங்கு வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர், சில விவசாயிகள் தங்களுடைய விளைநிலத்தை எக்காரணம் கொண்டு விட்டுதர முடியாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் , நிலம் எடுக்கும் பட்டாஎண்களை தற்போது தெரிவிக்க முடியாது, நிலம் எடுத்தபிறகே அறிவிக்கப்படும் என தகவல் தர மறுக்கின்றனர் தேன்கனிக்கோட்டை விவசாய மக்களுடன் தளி சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால்
    சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலை எதிர்ப்பு போராட்டத்தை போன்ற ஓசூர் பகுதிகளில் போராட்டங்கள் நடக்கும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad