பிரசாதம் சாப்பிட்ட 200க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்திபேதி மயக்கம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா குவளைக்கால் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா முன்னிட்டு கோவிலில் பிரசாதமாக புளியோதரை, வெண்பொங்கல், பொங்கல் போன்ற பிரசாதத்தை பக்தர்களுக்கு ஆலயம் சார்பாக வழங்கப்பட்டது.
இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்ட பக்தர்கள் வந்தி, பேதி, மயக்கத்தால் அவதியுற்றனர். குவளைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்றனர், அங்கு போதிய வசதி இல்லாததால் அவசர சிகிசைக்காக வைத்தியம் பார்த்துவிட்டு உடனே நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவரை தேசிய மக்கள் பேரியக்கம் தலைவர் நன்னிலம் செல்வா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கருத்துகள் இல்லை