Header Ads

  • சற்று முன்

    இந்திய தலைநகர் டெல்லியிலும் ஏவுகணை தாக்குதல் தடுப்பு அமைப்பு நிறுவப்பட உள்ளது.


    வாஷிங்டன், மாஸ்கோ போன்று , இந்திய தலைநகர் டெல்லியிலும் ஏவுகணை தாக்குதல் தடுப்பு அமைப்பு நிறுவப்பட இருக்கிறது.. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ ஆகிய நகரங்களில் ஏவுகணை, விமானம், ஆளில்லாக் குட்டி விமானம் ஆகியவற்றின் தாக்குதலில் இருந்து காக்கக்கூடிய அமைப்புகள் இருக்கின்றன.. நகரின் வான்பரப்பு நோக்கி ஏவுகணைகளோ விமானங்களோ வருவதை ரேடார் மூலம் முன்கூட்டி அறிந்து கொண்டு  ஏவுகணைகள் துணை கொண்டு  அவற்றைத் தாக்கி அழிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதை போன்ற அமைப்பு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நிறுவப்பட இருக்கிறது.. இத்தகைய அமைப்பை வாங்குவதற்கான தேவையைப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் குழு ஒப்புக்கொண்டுள்ளது.

    அமெரிக்காவில் இருந்து ஆறாயிரத்துத் தொள்ளாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அமைப்பு வாங்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், அமைச்சரவைச் செயலகங்கள் ஆகியவற்றின் மீது விமானங்கள் பறக்க ஏற்கெனவே தடை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad