Header Ads

  • சற்று முன்

    சமையல் கேஸ் மானியத்தொகை சீராக வழங்க வலியுறுத்தி எட்டயபுரம், கோவில்பட்டி தாலூகா அலுவலகம் முற்றுக்கை


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளத்தினை சேர்ந்த மக்கள் தங்களுக்கு சமையல் கேஸ் மானியம் சீராக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாத நிலை இருப்பதாகவும், சீராக மானியத்தொகை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி எட்டயபுரம், கோவில்பட்டி தாலூகா அலுவலகங்களை முற்றுக்கையிட்டு மனு அளித்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளத்தில் 300க்கு; மேற்பட்ட வீடுகளில் கேஸ் இணைப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு எட்டயபுரத்தில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி மூலமாக கேஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு சமையல் கேஸ்க்கான மானியத் தொகை வங்கி கணக்கில் சரிவர வரவு வைக்கப்படவில்லை என்றும், எனவே சீராக மானிய தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தட்டுப்பாடு இல்லமால் கேஸ் சிலிண்டர் வழங்க வேண்டும், மேலும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கேஸ் ஏஜென்சிகளை தேர்வு செய்து கொள் வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் எட்டயபுரம் தாலூகா அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர். தொடர்ந்து கோவில்பட்டி தாலூகா அலுவலகத்திலும் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.



    உடனுக்குடன் செய்திகளை பார்க்க nms today yourube subsribe செய்யவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad