• சற்று முன்

    கோவில்பட்டியில் நடிகர் விஜய்யின் 44ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடிகர் விஜய்யின் 44ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி நகர இளைஞரணி தலைமை சார்பாக கோவில்பட்டி பாரதி நகரில் ஏழை, எளிய பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது. கோவில்பட்டி யோகீஸ்வரர் திருமண மண்டபத்தில் ஏழை, எளிய பள்ளி மாணவர், மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், கல்வி உபகரணங்கள், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் செயல்படும் முதியோர் இல்லத்திற்கு அரிசி பைகள் வழங்குதல், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்குதல், முதியோர்களுக்கு இலவச வேட்டி மற்றும் மூதாட்டிகளுக்கு இலவச சேலை வழங்கும் விழா மற்றும்  மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    நடிகர் விஜய் நகர இளைஞரணி சார்பில் நடைபெற்ற விழாவிற்கு தலைவர் செண்பகராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் மகேஷ்குமார், செயலர் வேல்முருகன், துணைச் செயலர் மாரிசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பில்லா ஜெகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். முன்னதாக, திருமண மண்டப முன்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில்,  நகர மாணவரணி தலைவர் பூக்கடை குட்டி நகர மாணவரணிச் செயலர் ராகவன், நகர மகளிரணி செல்வி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad