Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு



    கோவில்பட்டி அருகேயுள்ள தலையால் நடந்தகுளம் கிராமத்தினை சேர்ந்த
    முண்டகசாமி என்பவர்  தனியார்  காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது
    இருமகன்களை கயத்தார்  காவல் துறையினர்  கைது செய்துள்ளதாக கூறி
    கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தலையால் நடந்தகுளம்
    கிராமத்தினை சேர்ந்தவர்  முண்டகசாமி. இவரது விவசாய நிலத்திற்கு அருகே தனியார்  காற்றாலை நிறுவனம் காற்றாலை அமைத்து வருகிறது.
    இந்நிலையில் தனியார்  காற்றாலை நிர;வாகம் இவரது நிலத்தின் ஒரு
    பகுதியை ஆக்கிரமிப்பு செய்தாக முண்டகசாமி நீதிமன்றத்தில் வழக்கு
    தொடர்ந்துள்ளார் . இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில் முண்டகசாமி மகன்கள் கருத்தப்பாண்டி,  சிவபெருமாள்
    ஆகியோர்  தனியார்  காற்றாலை நிர்வாகத்திடம் தகராறு செய்ததாக,
    அந்த நிர்வாகம் கயத்தார்  காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர் . இதன்
    பெயரில் கயத்தார்  போலீசார்  கருத்தப்பாண்டி,  சிவபெருமாள்
    இருவரையும் கைது செய்ததது. தனது மகன்களை காவல்துறை தனியார்
    காற்றாலைநிர்வாகத்திற்கு ஆதரவாக பொய் வழக்கு போட்டு கைது செய்து
    சித்தரவதை செய்வதாக கூறி முண்டகசாமி தீடீரென கோவில்பட்டி நீதிமன்ற
    வளாகத்தில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் அப்போது
    நீதிமன்ற வளாகத்தில் நின்று இருந்த காவல்துறையினர்  அவரை தடுத்து,
    கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதனை தொடர;ந்து போலீசார;
    வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    nms today youtube chanel பார்க்கவும். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad