Header Ads

 • சற்று முன்

  காவிரி நதி நீர் மீட்புப் போராட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ


  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான்யாரும் பிச்சை போடவில்லை என்றும், ஜெயலலிதாவுடன் இருந்து துரோகம் நினைத்தவர்கள்; வாழ முடியாது, அவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்று பார்த்து கொள்ளுங்கள், இந்த ஆட்சி 2021 வரை முழுமையாக நடைபெறும்.. அடுத்த தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம், விரைவில் கட்சத்தீவை மீட்போம் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற காவிரி நதி நீர் மீட்புப் போராட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் பேசி தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் காவிரி நதி நீர் மீட்புப் போராட்ட விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ பேசுகையில் 82 மணி நேரம் உண்ணாவிரதம், சட்டப்போராட்டம் நடத்தி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை அரசு இதழியலில் வெளியிட செய்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கண்ட அதிமுகவிற்கு தான் காவிரி மீட்பு குறித்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், பேசுவதற்கும் தகுதி உண்டு மற்றவர்களுக்கு கிடையாது, ஸ்டெர்லைட் பிரச்சினையின் உண்மை நிலைகுறித்த மீனவமக்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர், என்ன நடந்து, எப்படி நடந்தது, நாங்கள் பலியாகிவிட்டோம், அரசுக்கும் எவ்வித தொடர்பும், களங்கமும் இல்லை என்பதை மீனவ மக்கள் உடைத்துதெறிந்து விட்டனர். மக்கள் என் முகத்திற்கு வாக்களிக்கவில்லை, அதிமுக பொறுத்தவரை எம்.ஜீ.ஆர் கைநீட்டுபவர் வெற்றி பெறுவர்,  ஜெயலலிதா கைநீட்டுபவர்களுக்கு மக்கள் வாக்களித்தனர் இது தான் வரலாறு, அதிமுகவிற்கு என்று அழிவு கிடையாது, அதிமுகவில் தான் இருந்து பிரிந்தவர் யாரும் உருப்பட்டது கிடையாது, இந்த இயக்கத்தில் எந்த கிளைகள் தொடங்கினாலும், அவை வெட்டப்பட்டு, மக்களால் நிராகரிக்கப்பட்டு, அழிந்து போன வரலாறு தான் உண்டு, கோவில்பட்டிக்கு 2வது குடிநீர் திட்டத்தினை தந்தவர் ஜெயலலிதா, அவருக்கு தான் அந்த புகழும் சேரும், ஆனால் சிலர் அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு நான் காரணம் என்று கூறுவது உண்டு, ஆனால் நாங்கள் யதார்த்தினை உணர்ந்தவர்கள், எல்லா வெற்றியும், புகழும் ஜெயலலிதாவை சேரும், பலர் வரலாறு தெரியமால் பேசி வருகின்றனர். நமது உரிமையை தாரை வார்த்து விட்டு கொடுத்தது, திமுக தலைவர் கருணாநிதியும், திமுக தான், காவிரி,முல்லை பெரியாறு பிரச்சினை மட்டுமின்றி, நெய்வேலி என்.எல்.சி பிரச்சினையிலும் நமது உரிமை விட்டுக்கொடுக்கமால் வெற்றி பெற்று தமிழர்களின் உரிமை மீட்டு கொடுத்தவர் ஜெயலலிதா, இதே போன்று கச்சதீவை மீட்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவு, கச்சதீவை மீட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை, அந்நாள் அதிமுகவின் பொன்னாள், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்த பெருமை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சாரூம், ஆனால் வேறு யாரூம் பிச்சை போடவில்லை, நாங்கள் யாரூம் நன்றி கெட்டுபேகவில்லை, இந்த ஆட்சி போகவேண்டும் என்று சொல்றவதான் நன்றி கெட்டு அலைகிறான், ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாது, விட்டுப்பார்க்காது,அவருக்கு துரோகம் செய்தவர்கள் உலகத்தில் வாழ முடியாது, ஜெயலலிதாவுடன் இருந்து துரோகம் நினைத்தவர்கள்; வாழ முடியாது, அவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்று பார்த்து கொள்ளுங்கள், இந்த ஆட்சி 2021 வரை முழுமையாக நடைபெறும்.. அடுத்த தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம், 3 ஆண்டுகாலம் இந்த அரசு மானியக்கோரிக்கை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிமுக அழிக்க முடியாது என்ற யதார்த்தினை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவும் புரிந்து கொண்டுள்ளது, மத்தவங்க சொல்லிக்கொண்டு இருக்கலாம் இந்த ஆட்சி இருக்கும் என்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம், நீங்கள் நாட்டில் இருப்பீர்களா, அரசியலில் இருப்பீர்களா பார்த்துக்கொள்ளுங்கள், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்தாக வரலாறு இல்லை, ஜெயலலிதாவிற்கு முன்பும், பின்பும் அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் அடையாளம் தெரியமால் காணமால் போய் உள்ளனர். அதிமுக ஆண்டு ஆண்டுகாலம் ஆலமரம் போல் வளர்ந்து, அருகம்புல் வேர்முளைத்து தமிழ் மக்களுக்கு இந்த இயக்கம் சேவை செய்யும் என்றார்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  nms today you tube channellai  பார்க்கவும்.

  கருத்துகள் இல்லை