• சற்று முன்

    கோவில்பட்டியில் நள்ளிரவில் வீட்டிற்குள் குதித்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொது மக்கள்


     கோவில்பட்டியில் உழவர்சந்தை பின்பகுதியில் உள்ள குடியிறுப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் குதித்த வாலிபரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். மது போதையில் இருந்த அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே உழவர்சந்தை உள்ளது.இதன் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிறுப்பு பகுதிகள் உள்ளன. மேலும் மெயின் சாலைக்கு அருகில் உள்ள பகுதியும் கூட. இந்நிலையில் நள்ளிரவில் அப்பகுதியில் வீட்டி மாடி பகுதியில் சத்தம் தீடீரென சத்தம் கேட்டதும், அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்த போது ஒரு வாலிபர் ஒரு வீட்டின் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கிழே குதித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து விசாரித்த போது , தனது மனைவியை பார்க்க வந்தேன், காதலியை பார்க்கவந்தேன் என்று முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தால் பொது மக்கள் கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.அந்த வாலிபர் மது போதையில் இருப்பதாகவும், முன்னுக்குபின் முராண தகவல்களை தருவதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad