Header Ads

 • சற்று முன்

  தமிழகத்தில் நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்தியரசு தான் காரணம் - ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் குற்றச்சாட்டு


  கோவில்பட்டியில் ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அந்த அமைப்பின் தலைவர் அதியமான் கலந்து கொள்ள வந்த போது செய்தியாளர்களிம் பேசுiயில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு என்ற பெயரில் படுகொலையை அரசு அரங்கேற்றி விட்டு ,துணை வட்டாட்சியர்கள் தான் உத்தரவிட்டனர் என்று திசை திருப்புகின்ற பணியை முதல்வர், துணை முதல்வர் செய்து வருகின்றனர். இந்த படுகொலைக்கு பொறுப்பு ஏற்று ராஜினமா செய்ய வேண்டும், நடிகர் ரஜினிகாந்த் மிக தாமதாக தூத்துக்குடிக்கு வந்து சினிமாவில் வசனம் போன்றுவது போன்று போராட்டம், போராட்டம் நடத்தி கொண்டு இருந்த நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் சமூக விரோதிகள் போராட்டத்தில் கலந்த கொண்ட காரணமாகதான் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறியதற்கு தூத்துக்குடி மக்களிடம் ரஜினிகாந்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், அது மட்டுமல்ல காலாபடத்தினை ஓட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும், அது தான் அவருக்கு வழங்க கூடிய மிகச்சிறந்த பாடமாக இருக்கமுடியும், துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிசூடு நடத்த நிச்சயமாக ஆணை வழங்க வாய்ப்பு இல்லை, எனவே காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முழு பொறுப்பு ஏற்று தனது அரசினை ராஜினமா செய்ய வேண்டும், நீட் தேர்வு முடிவுகளை பார்க்கும் போது மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. உத்திரபிரேதசம் மாநிலத்தில் கல்வி இறுதியாண்டில் படிக்கின்றவர்கள் 70 சதவீதம் தேர்வில் தோல்வி அடைந்து கொண்டி இருக்கிற சூழ்நிலையில், அந்த மாநிலத்தில் நீட் தேர்வில் 76 சதவீதம்மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று சொல்வது உண்மைக்கு புறம்பான, ஏதோ ஊழல் நடந்து இருக்கிற செய்தி, நல்லபடிக்கும் மாணவர்களை கொண்ட தமிழகத்தின் தேர்வு விகிதம், எல்லா மாநிலங்களை விட குறைவாக கொண்டு வந்துள்ளது மத்தியரசு தமிழகத்தின் மீது நடத்தும் தாக்குதல், தமிழகத்தில் மருத்துவ கல்வி அமைப்பு முறை வலுவாக சிறப்பாக உள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் மோடி தலைமையிலான மத்தியசு திட்டமிட்டு இது போன்ற தேர்வினை நடத்துகின்றனர்.இனி வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கும் இதுபோன்று தேர்வினை கொண்டு வரவுள்ளனர். இதன் உள்நோக்கம் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் முழுவதும் ஆக்கிரமிப்பது மட்டுமல்ல, மக்களை சீர்குலைப்பதற்கான வேலை செய்து வருகின்றனர். 

  ஏற்கனவே நீட் தேர்விற்காக அனிதாவை இழந்து இருக்கிறோம், இப்போது மீண்டும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு காரணம் மத்தியரசு தான். துமிழகத்தில் இருக்கிற பி.ஜே.பி. தலைவர் மன்னிப்பு கேட்பது மட்டுமின்றி, தமிழகத்தின் நிலையை எடுத்து கூற வேண்டும், ஆனால் இன்றை வரைக்கும் எடுத்து சொல்ல மறுத்து வருகின்றனர். மத்தியரசு தன் எண்ணத்தினை ஈடு செய்கின்ற நிலை தமிழகத்தில் நிச்சயமாக நடைமுறைப்படுத்த முடியாது, காரணம் இது தந்தை பெரியார் மண்,அவரது கருத்தியலில் வளர்க்கப்பட்ட இளைஞர்கள் உள்ளனர். இதில் நிச்சயமாக மோடி தோல்வி அடைவார் என்றார்.

  செய்திகளை உடனுக்குடன் பார்பதற்கு nms today youtube subscribe செய்யவும் 

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad