• சற்று முன்

    வாஞ்சிநாதன் 107வது நினைவு நாள் மணியாட்சி ரயில் நிலையத்தில் திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்



    சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் 107வது நினைவு தினம் - வாஞ்சிமணியாச்சியில் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை

     கோவில்பட்டி அருகேயுள்ள வாஞ்சிமணியாச்சி. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ரெயில்வே ஜங்சன் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டம் நடைபெற்று கொண்டு இருந்த காலத்தில் 1911ம் ஆண்டு ஜீன் 17ந்தேதி அப்போதைய திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷ்துரை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ரெயிலில் சென்ற போது, வாஞ்சி மணியாச்சி ரெயில்வே ஜங்சனில் வைத்து, சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொன்று, தன்னுடைய உயிரையும் மாய்த்துக் கொண்டார். அவரது 107வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

    இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தமிழக அரசு சார்பில் வாஞ்சிமணியாச்சி ரெயில்வே நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாஞ்சிநாதன் திருவுருவப்படத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன்தேவசகாயம், துணை தாசில்தார் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் வெள்ளத்துரை, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் சார்பிலும் வாஞ்சிநாதன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது, இதில் அந்த அமைப்பின் தலைவர் தமிழரசன், எழுத்தாளர் இளசைமணியன், 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம், ஐ.என்.டி.யூ.சி.மாவட்ட பொது செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வீடியோவை பார்பதற்கு nms today youtube subscribe செய்யவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad