Header Ads

  • சற்று முன்

    காவிரி மேலாண்மை விவகாரம் நீதி மன்றம் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும், நீதிமன்ற நடவடிக்கை பற்றி கருத்து கூற முடியாது – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ


    காவிரி மேலாண்மை விவகாரம் நீதி மன்றம் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும், நீதிமன்ற நடவடிக்கை பற்றி கருத்து கூற முடியாது, நெல்லையில் மாணவன் தற்கொலை கொண்ட சம்பவம் செயல் குடிப்பழக்கம் கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பதில் மாற்றிமில்லை, மாணவனின் பரிதபமான இழப்புக்கு அரசு பரிகாரமாக ஏதவாது செய்யும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2வது குடிநீர் திட்டம் மற்றும் பல்வேறு அபிவிருத்தி பணிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் 11ந்தேதி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான கால்கோள் நடும் நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மாவட்ட எஸ்.பி. மகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    இதனை தொடர்ந்து  அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் எங்கள் 5 ஆண்டுகள் முடியும் நிலையில் மது இல்லாத மாநிலமாக மாற்ற படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மது தீமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.28 கோடி ஒதுக்கி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.நெல்லையில் மாணவன் தற்கொலை கொண்ட சம்பவம் செயல் குடிப்பழக்கம் கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பதில் மாற்றிமில்லை, மாணவனின் பரிதபமான இழப்புக்கு அரசு பரிகாரமாக ஏதவாது செய்யும் என்றும், குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களை மீட்க அரசு பல்வேறு மையங்களை நியமித்துள்ளது, மாணவர்கள் இது போன்ற தற்கொலை சம்பங்களில் ஈடுபட கூடாது என்றார். சட்டமன்றத்தில் சம்பளம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது திமுக தான் ,மு.க.ஸ்டாலினை தவிர அவர்களது சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஊதிய உயர்வு வேண்டாம் என்று கூறவில்லை, அரசியல் காரணத்திற்கான அதனை மு.க.ஸ்டாலின் திசை திருப்பி லாபம் பார்க்கிறார் என்றும், கெய்ல் திட்டம் குறித்து நான் தெரிவித்த கருத்தினை வைகோ தவறாக புரிந்து கொண்டார். அந்த திட்டம் வந்த போது வைகோ, திமுக,காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததாக தெரிவித்தேன், வரலாறு பற்றி எங்களுக்கு தெரியும்,  காவிரி மேலாண்மை வாரியம் பற்றி திமுக கூட இருந்து வைகோ பேச அருகதையில்லை, 1974ல் காவிரி தொடர்பான ஒப்பந்ததை யார் புதுப்பிக்கவில்லை என்பதனை வைகோ கூற வேண்டும், இப்படிபட்ட வரலாறுகளை அவர் தான் மறைக்கிறார். கூட்டணி மாறுவதற்கு ஏற்ப மாற்றி,மாற்றி பேசி வருவதாக தான் அன்றும், இன்றும் சொல்கிறேன்., காவிரி மேலாண்மை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது, நீதி மன்றம் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும், நீதிமன்ற நடவடிக்கை பற்றி கருத்து கூற முடியாது,நீட் தேர்வு மையங்கள் மற்ற மாநிலங்களுக்கு மாற்றபட்டுள்ளது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது , கல்லூரி விழாக்களில் அரசியல் பேசக்கூடாது என்பது நல்ல முடிவு, அரசின் கருத்தினை கேட்டுதான் நீதிமன்றம் சொல்லியுள்ளது, மாணவர்களிடையே தாக்கத்தினை ஏற்படுத்த கூடாது என்பது நல்ல முடிவு முதல்வர் குறித்து விளம்பரம் தானகவே அமைந்தது, பல்வேறு விமர்சனங்கள் வந்ததால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad