Header Ads

  • சற்று முன்

    யார் அரைவேக்காடு? கடம்பூர் ராஜூ அமைச்சருக்கு கீதாஜீவன் எம்எல்ஏ எச்சரிச்கை!!


    தூத்துக்குடியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோவில்பட்டியில் வருகிற 11ம் தேதி 2வது பைப்லைன் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொங்கி வைக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. தற்போது இத்திட்டத்தில் பாதி பணிகள் கூட நிறைவடையாத நிலையில் திறப்பு விழா நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். 10 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும். ஆனால் கடலையூர் ரோடு, செல்லப்பாண்டி நகர் உள்ளிட்ட 3 இடங்களில் கட்டுமானப் பணிகள் கூட நடக்கவில்லை.

    கடந்த 2007 ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக தளபதியார் இருந்தபோது, கோவில்பட்டி 2வது பைப்லைன் திட்டத்திற்கு நிர்வாக அனுமதியும் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இப்பணிகளை நிறேவற்றாமல் கிடப்பில் போட்டுள்ளனர். 2வது பைப்லைன் திட்டம் மூலம் 38,60,000 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் ஆனால் 14 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு கூட பணிகள் நடைபெற வில்லை. இதுதொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி முதல்வருக்கு கருப்பு கொடி காட்ட முடிவு செய்துள்ளோம்.

    ஆனால், என்னை அரைவேக்காடு என்ற அமைச்சர் கூறியுள்ளார். இதனை நான் வன்மையாகக் கண்டித்துள்ளார். அவர் ஆசிரியர் என்றால், நான் முதுநிலை பட்டதாரி ஆசிரியர். என்னை அரைவேக்காடு என்று கூறியதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு திமுக மகளிர் அணியினர் பாடம் புகட்டுவார்கள். உங்கள் லட்சனத்தை அறிந்து தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உ்ங்களை பேசவிடாமல் வைத்திருந்தார். கோவில்பட்டி 2வது பைப்லைன் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து மக்கள் பயனடைய வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    உதாரணமாக தூத்துக்குடி 4வது பைப்லைன் திட்டத்தை கடந்த ஆண்டு நவ.22ம் தேதி முதல்வர் திறந்து வைத்தார். ஆனால், 7 மாதங்களாகியும் 4வது பைப்லைன் திட்டத்தில் முழுமையாக குடிநீர் வழங்கப்பட வில்லை. மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை. கேவிகே நகர் பகுதியில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதுபோன்ற நிலைமை கோவில்பட்டிக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட உள்ளோம் என்றார்.  பேட்டியின் போது திமுக பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad