Header Ads

  • சற்று முன்

    மதுரையில் வினா தாள் மாறியதால் மாணவிகள் குழப்பம்


    மருத்துவப் படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தமிழ்வாயிலாக தேர்வெழுதுவோருக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் ஒரு சில இடங்களில் தாமதமாக தேர்வு நடத்தப்பட்டது. 

    மருத்துவம் மற்று பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 255 மையங்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இதில் 5 ஆயிரத்து 800 மாணவர்கள் எர்ணாகுளம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் தேர்வு எழுதினர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 3 ஆயிரத்து 500 மாணவர்கள் தேர்வெழுதச் சென்றதால் நெல்லையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    தமிழகத்தில் உள்ள 170 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கிய நீட்தேர்வு பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது. வேதியியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளில் கேள்விகள் எளிதாக இருந்ததாக கூறிய மாணவர்கள், இயற்பியல் பாட கேள்விகள் சி.பி.எஸ்.இ. தரத்தில் இருந்ததால் கடினமாக இருந்தது என கூறினர்.

    இதனிடையே சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் வழி மாணவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் தேர்வு தாமதமாக தொடங்கியது. மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில்  720 மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் வகையில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad