Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கூட்ட ம்



    கோவில்பட்டி வட்டார விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கூட்டம் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. இப்பயிற்சியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, கால்நடை துறை, வேளாண் பொறியியல் துறை, விதை சான்றளிப்பு துறை ஆகிய துறையினர் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை முறை வேளாண்மை மற்றும் இயற்கை முறை பூச்சி மேலாண்மை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.


     நிகழ்ச்சியில் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முருகன் தலைமை வகித்து பேசினார். கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சமுத்திரபாண்டியன் வரவேற்று பேசினார்.  வேளாண்மை அலுவலர் அனி வேளாண்மை துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்தும், வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை வேளாண் அலுவலர் பாலமுருகன் கூட்டு பண்ணையம் பற்றியும்,  வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்தும், கால்நடை மருத்துவர் செல்வி மண்ணில்லா தீவனம் குறித்தும் பேசினர். விதை சான்றளிப்பு துறை வேளாண்மை அலுவலர் கற்பகம் விதை பண்ணை அமைத்தலின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். துணை வேளாண்மை அலுவலர் சுரேந்திரன் நுண்ணீர் பாசன மேலாண்மை குறித்து எடுத்துரைத்தார். பாண்டியராஜ் தோட்டக்கலை துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்தும், மூத்த பேராசிரியர் பாஸ்கரன் இயற்கை வேளாண்மை குறித்தும், ஹரிராமகிருஷ்ணன் புதிய பயிர் ரகங்கள் பற்றியும், ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமமூர்த்தி இயற்கை முறை பு+ச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். சென்னை வேளாண்மை அலுவலர் விக்னேஷ்வரி மற்றும் தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் மலர்விழி (தரக்கட்டுப்பாடு) ஆகியோர் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்வது பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர்  தேவசாந்தி நன்றி கூறினார். இப்பயிற்சியில் கோவில்பட்டி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் ரேவதி, செந்தில்குமார், செல்வராஜ், சரவணக்குமார், சண்முகஈஸ்வரன், பாண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் மகேஸ்வரி, குமரேசன் ஆகியோர் செய்திருந்தன

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad