Header Ads

  • சற்று முன்

    கோவையில் ரயில்வே பெண் காவலர் தூக்கிலிட்டு தற்கொலை

    கோவை: குடும்ப பிரச்சினை காரணமாக ரயில்வே பெண் காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியா (29). இவரது கணவர் நவநீதகிருஷ்ணன். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரியா கடந்த 2013-ம் ஆண்டு ஏ.ஆர். காவலர் பணியில் இணைந்தார். பின், கோவை ரயில்வே காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். கடந்த சில வருடங்களாக பிரியாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களது குழந்தைகளை பிரியாவின் தாயார் கவுண்டம்பாளையத்தில் வளர்த்து வருகிறார்.

    பணியின் காரணமாக காவல்துறை குடியிருப்பில் பிரியா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு (வியாழக்கிழமை) பணி முடிந்து வந்த பிரியா, வெள்ளிக்கிழமை திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் ரேஸ்கோர்ஸ் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் இடம் விரைந்த போலீஸார், இறந்து போன காவலர் பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad