Header Ads

  • சற்று முன்

    மிண்டும் நுரையை பொங்கும் நொய்யல் ஆறு ஆற்றில் சாய கழிவுகள் கலப்பதாக புகார்.


    திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரையுடன் கூடிய தண்ணீர் செல்வதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தண்ணீர் வந்ததைப் பயன்படுத்தி சாயப்பட்டரை உரிமையாளர்கள், ஆற்றில் சாயக்கழிவுகளை திறந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீராதரமான நொய்யல் ஆறு , தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளின் காரணமாக தற்போது கால்வாய் போல காட்சியளிக்கிறது. கூடவே சாயப்பட்டரை கழிவுகளும் ஆற்றில் கலந்ததால் நொய்யல் ஆறு தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது- தற்போது திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி சில சாயப்பட்டரை உரிமையாளர்கள் ஆற்றில் இரவோடு இரவாக சாயக்கழிவுகளை திறந்துவிட்டுள்ளனர்.
    இதனால் ஆறு முழுவதும் நுரை பொங்கிக் காணப்படுகிறது. சில இடங்களில் பல அடி உயரத்திற்கு நுரை தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு கடும் துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளதால் ஆற்றோரம் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
    ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சுத்திகரிக்கப்பட்ட பின்பே சாயகழிவு நீரை ஆற்றில் திறந்துவிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்முறை மூலம் சாயக்கழிவு நீரை சுத்திகரித்தால் அதிகளவு செலவாகும் என நினைக்கும் சாயப்பட்டரை ஆலை முதலாளிகள், மழை பெய்யும் நேரங்களில் நொய்யல் நதியில் கழிவு நீரினை சுத்திகரிக்காமல் நேரடியாக கலந்து விடுவதாகவும், இதனால் நொய்யல் நதி நஞ்சு மிகுந்த கழிவுகள் கொண்ட நதியாக மாறியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
    நொய்யல் ஆற்றில் சட்டவிரோதமாக சாயக்கழிவுகளை கலந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad