Header Ads

  • சற்று முன்

    மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.


    இராமநாதபுரம் மாவட்டம் கள்ளிகுடிக்கு வருகை தந்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எதிராக  திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மத்திய அரசின் திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்படுகின்றனவா? மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், உள்ளிட்ட வசதிகள் சென்று சேர்ந்து இருக்கிறதா? என ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இராமநாதாபுரம் வந்துள்ளார்.
    இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று கூறியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் நிர்மலாசீதாராமனின் காருக்குப் பின்னால் வந்த பாஜகவினரின் கார்கள் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad