Header Ads

  • சற்று முன்

    ஸ்டெர்லைட் ஆலை மூடக்கூடிய தகுதி மத்திய, மாநில அரசுயிடம் இல்லை, உச்சநீதிமன்றத்திற்கு தான் உள்ளது. – தமிழிசை சௌந்தர ராஜன் பேட்டி

    ஸ்டெர்லைட் ஆலை மூடக்கூடிய தகுதி மத்திய, மாநில அரசுயிடம் இல்லை, உச்சநீதிமன்றத்திற்கு தான் உள்ளுது என்றும், கர்நாடகவில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதால் தமிழகத்திற்கு உறுதுணையாகவும், பக்கபலமாக இருக்கும், காவிரி பிரச்சினை தீரூம் என்று  கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊத்துப்பட்டியில் உள்ள சங்கரபாண்டிய சுவாமிகள் சமாதுவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியி தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



    இதனை தொடர்ந்து தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்  கர்நாடாகவில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று பெரும்பலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்களின் கருத்தும் அப்படித்தான் இருந்தது, பாரதி ஜனதாகட்சி நிச்சயம் வெற்றி பெறும், தமிழகத்திற்கும், கார்நாடகவிற்கும் சுமூகமான சூழ்நிலை ஏற்படும்,நெடுநாளாக தீர்க்கப்படாத காவிரி பிரச்சினை தீரும்,  கர்நாடகவில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதால் தமிழகத்திற்கு உறுதுணையாகவும், உதவியாகவும், பக்கபலமாக இருக்கும், காவிரி பிரச்சினை தீரூம், முன்னாள் இருந்த கர்நாடாக காங்கிரஸ் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை, இன்று மத்தியரசினை பார்த்து கேள்வி கேட்பவர்கள் உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் தர உத்தரவிட்ட போது  யாரூம் கேள்வி கேட்கவில்லை, சித்தராமையா அதற்கு அடிபணியவும் இல்லை, இது மட்டுமல்ல, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஒவ்வொரு முறையும், நியாமாக நீரை வழங்கவில்லை, அதனால் தான் இன்றைய சூழ்நிலையில் பா.ஜ.க அரசு தான் வர வேண்டும் என்று, தமிழக மக்களும், கர்நாடாக மக்களும் விரும்புகிறார்கள், அது தான் நடக்க போகிறது.மோடிக்கு ராகுல் காந்தி சிம்செப்பானமாக இருப்பதாக திருநாவுக்கரசர் கூறுவது, அவர் தூக்கத்தில் பேசிவருகிறார். 23 மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது, தமிழகத்தில் தேசிய கட்சி ஒன்று ஆட்சிக்கு வருகிறது என்றால் அது பா.ஜ.கவாக மட்டும் தான் இருக்க முடியும், காங்கிஸ் கட்சிக்கு வாய்ப்பு இல்லை, காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்க இல்லை 3வது அணியில் இருக்க என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும், திருமவாளவன் கார்நாடகவில், காங்கிரஸ்க்கு ஆதரவு தெரிவித்தார், திமுகவின் நிலைப்பாடு தெரியவில்லை, தெலுங்கான முதல்வர் சந்திரசேகராவ் மு.க.ஸ்டாலினை பார்க்கிறார்,  மேற்கு வங்காளம் முதல்வர் மம்தாபானர்ஜி, மு.கஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறாத இல்லையா என்ற கனவினை விட்டுவிட்டு திமுக கூட்டணியில் இருக்க என்பதனை தெரிந்து கொள் வேண்டும், பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றும், ஸ்டெர்லைட் ஆலைக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகள் தான் அனுமதி கொடுத்தது, பா.ஜ.கவிற்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய தகுதி அதிமுகவிற்கோ, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசிற்கோ இல்லை, உச்ச நீதிமன்றத்திற்கு தான் உள்ளது. தீப்பெட்டி உள்ளிட்ட சிறு,குறு தொழில்களை பாதுகாக்க மத்தியரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad