• சற்று முன்

    பெரம்பலூர் அருகே இரண்டு கார் நேருக்குநேர் மோதியதில் 9 பேர் பலி


    பெரம்பலூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன் என்பவர் தனது மனைவி ,மகள் மற்றும் உறவினர்களுடன் டவேரா வாடகை காரில் கோடை விடுமுறையை கழிக்க கொடைக்கானல் நோக்கி புறப்பட்டனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் அந்த கார் பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் திருச்சியிலிருந்து கடலூர் மாவட்டம் பென்னாடம் நோக்கி சென்று கொண்டிருந்த ஹூண்டாய் வெர்னா கார் திடீரென ஓட்டுனர் சக்தி சரவணனின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சாலை தடுப்பான சென்டர் மீடியனை தாண்டிக் கொண்டு சென்று எதிரே மோகன் குடும்பத்தினர் வந்த டவேரா காரின் மீது அதிவேகமாக மோதியது.படுவேகத்தில் வெர்னா கார் மோதியதில் டவேரா கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் டவேரா காரில் பயணித்த மோகன், அவரது நண்பர் முரளி, 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கு காரணமான வெர்னா காரை ஓட்டி வந்த சக்தி சரவணன், காயங்களுடன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெர்னா காரை ஓட்டி வந்த டிரைவர் சக்தி சரவணன் குடிபோதையில் இருந்ததே இந்த கோர விபத்துக்கு காரணம் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad