• சற்று முன்

    சசிகலாவை மேற்கு மண்டல ராவணன் சந்திப்பால் - தினகரன் அதிர்ச்சி


    சென்னை: சசிகலாவை திடீரென மேற்கு மண்டல ராவணன் தரப்பு சந்தித்ததால் பெங்களூரு சிறையில் தினகரன் நடத்த இருந்த மெகா டிராமா ஒன்று ரத்து செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
    சசிகலாவை முன்வைத்து தினகரன், திவாகரன் ஆடிவரும் அரசியல் விளையாட்டுக்களை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள். ஆளும்கட்சிக்குச் சாதகமாக சசிகலாவைக் கொண்டு வரும் வேலையில் மேற்கு மண்டல ராவணன் ஈடுபட்டு வருகிறார். இதனை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் டெல்டா மாவட்ட பிரமுகர்கள்.பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 8-ம் தேதி சசிகலாவை சந்தித்தார் தினகரன். இந்த சந்திப்பில் நடராஜனின் சகோதரர் ஒருவரும் உடன் இருந்தார்.
    இந்த சந்திப்பில், அடுத்துச் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி விரிவாகப் பேசினார் தினகரன். சில விஷயங்களில் தினகரனின் செயல்பாடுகளையும் சசிகலா விமர்சித்தார். இந்த சந்திப்புக்கு முன்னதாக, ராவணன் தரப்பில் சசிகலாவை ஒரு நபர் சந்தித்திருக்கிறார். அவரைப் பற்றிய விஷயங்கள், மிகுந்த ரகசியமாக உள்ளன.
    இதில் பேசப்பட்ட விஷயங்கள்தான் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. ராவணனுக்கும் தினகரனுக்கும் எந்தக் காலத்திலும் ஒத்துவராது. திவாகரன் மூலமாகத்தான் மேற்கு மண்டலத்தில் கால்பதித்தார் ராவணன். 2011-ல் கார்டனால் மிக மோசமாகப் பழிவாங்கப்பட்டார் ராவணன். இதன்பிறகு எந்தவித அரசியலிலும் ஈடுபடாமல் முடங்கியே கிடந்தார்.
    ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு லைம்லைட்டுக்கு வந்தார். அதற்கேற்ற சூழல்களை உருவாக்கிக் கொடுக்க தினகரன் விரும்பவில்லை. இதையடுத்து, நேரடியாகவே சசிகலாவை சந்திக்க முயற்சி செய்தார். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு சசிகலாவை சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது.
    இதன்பிறகு, ஆளும்தரப்புக்கு ஆதரவாக இருந்துகொண்டு, டி.டி.வி தரப்பை பலவீனமடையச் செய்யும் பணிகளை வேகப்படுத்தி வருகிறார். இதன் ஒருகட்டமாக, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசியிருக்கிறார் தூதுவர் ஒருவர். இந்த சந்திப்பில், ' உங்களுக்கு ஆதரவாகத்தான் ஆளும்தரப்பில் பலரும் இருக்கிறார்கள். நீங்கள் மீண்டும் வந்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இதுதொடர்பாக விரிவான ஆலோசனைகளை நடத்தி வருகிறோம். தனி அணியாகக் கிளம்பிய தினகரன், குடும்பத்தினரையும் துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டார். அவர் ஒரு லெட்டர் பேடு கட்சியின் தலைவராகத்தான் மாறிப் போவார். நீங்கள் இத்தனை காலம் உழைத்த கட்சியில் இருப்பதுதான் சிறந்தது. நீங்கள் சரியென்று சொல்லுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என உறுதியளித்துவிட்டு வந்துள்ளனர்.இப்படியொரு முயற்சியை முன்னெடுப்பதற்குக் காரணமே, தினகரனின் செயல்பாடுகள்தான். அரசியலில் இன்னும் கொஞ்சம் வளர்ந்துவிட்டால், குடும்ப உறுப்பினர்களைப் பழிவாங்கவும் அவர் தயங்க மாட்டார். இதை அனைவரும் புரிந்து கொண்டார்கள்" என்கிறார் டெல்டா மாவட்ட சசிகலா ஆதரவாளர் ஒருவர். " அதேநேரம், கடந்த 8-ம் தேதி 18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் உள்பட மொத்தம் 21 எம்.எல்.ஏக்களை சசிகலா முன்பு நிறுத்துவதற்குத் திட்டம் போட்டு வைத்திருந்தார் தினகரன்.
    இதற்காக சிறைத்துறையின் அனுமதியைப் பெறும் வேலைகளையும் செய்தார். கடைசி நேரத்தில் இந்தப் பிளானை ரத்து செய்துவிட்டார். இதற்குக் காரணமே, சசிகலாவிடம் ராவணன் தரப்பினர் தூது சென்ற விஷயத்தை அறிந்து கொண்டதுதான். ராவணனைத் திரைமறைவில் இயக்கிக் கொண்டே, அரசியல்ரீதியாக அடுத்தகட்ட ஆட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் அமைச்சர்கள் சிலர். தினகரனுக்கு எதிரான குடும்ப உறவுகளை ஒன்றிணைப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். இதனை எந்தவகையில் முறியடிப்பது எனத் திகைத்துப் போய் இருக்கிறார் தினகரன்" என்கின்றனர் குடும்ப கோஷ்டிகளில் உள்ள சிலர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad