Header Ads

  • சற்று முன்

    மே 11ந்தேதி கோவில்பட்டிக்கு வரும் முதல்வருக்கு கருப்புக்கொடி - திமுக அறிவிப்பு



    கோவில்பட்டி 2வது குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் மே 11ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோவில்பட்டிக்கும் வரும் அவருக்கு திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் நீட் தேர்வினால் மாணவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறி கோவில்பட்டியில் திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவன் பேட்டி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 36வார்டுகள் உள்ளது இந்த பகுதில் கடந்த 35ஆண்டுகளுக்கு முன்பு சீவலபேரி ஆற்றுபடுகையில் இருந்து தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க்கபட்டு வருகிறது. இந்த திட்டம் அப்போதய மக்கள் தொகையை கணக்கீட்டு வழங்கபட்டு வந்தது.இதனால் தற்போது கோவில்பட்டி நகராட்சி பகுதியில் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கபடுகிறது. இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கைஏற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2வது குடிநீர் திட்டத்தை தமிழகஅரசு அறிவித்து அதன் பணிகள் 82 கோடிருபாய் செலவில்  துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது சீவலபேரி பகுதியில் புதிய உறை கிணறுகள் அமைக்கப்பட்டுபுதிய  குழாய்கள் அமைக்க பட்டு குடிநீர்கொண்டுவரும் பணிகள்நிறைவுபெற்றுஷள்ளது ஆனால் நகருக்குள் குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்காமலும் மேல்நிலை தொட்டிகள் அமைக்கும் பணிநிறைவடையாமல் 2வதுகுடிநீர் திட்டத்தை வரும் 11ம்தேதி துவக்கி வைக்க வருகைதரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமூக மற்றும் அதன் தோழமைகட்சிகள் கருப்புக்கொடி காட்டமுடிவு செய்துள்ளது. கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக உள்ளிட்ட அதன் தோழமைகட்சிகள் கூட்டத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவடையாத திட்டத்தை துவக்க11ம்தேதி கோவில்பட்டிக்கு வரும்  முதலமைச்சருக்கு கறுப்புக்கொடிக்காட்ட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதனை தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோவில்பட்டி 2வது குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் மே 11ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோவில்பட்டிக்கும் வரும் அவருக்கு திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் நீட் தேர்வினால் மாணவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறி;.என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் திமுக, மதிமுக, சி.பி.ஐ., சிபிஎம், உள்ளிட்டதோழமைகட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad