Header Ads

  • சற்று முன்

    தேவைப்பட்டால், திரைப்படத்துறைக்கு தனி வாரியம் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ



    கோவில்பட்டி பயணியர் விடுதியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை  அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீவுடன் நடிகர் ரித்தீஷ், கலைப்புலி தாணு தீடீர் சந்திப்பு – அமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.

    சினிமாவில் துறையில் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் எப்படிப்பட்ட இழப்புகளை சந்தித்து வருகிறோம் , அதற்கு என்ன தீர்வு அரசு எடுக்க வேண்டும் என்பதற்காக அரசிடம் எங்களின் வேண்டுகோளை தெரிவித்துள்ளோம்,அமைச்சர், முதல்வரிடம் எடுத்துக் கூறி தயாரிப்பாளர்களுடன் சங்கத்துடன் இணைந்து சுமூகமான தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.அரசுக்கும் திரையித்துறையிருக்கு இடையே பரஸ்பரம் ஒரு நட்பு பாலம் அமைந்து இருக்கிறது. திரையுலகம் நன்றியுடன் இருக்கும், எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும், திரைப்படத்துறை செழிப்பாகவும், பொழிவாகவும் இருக்கும் என்றார்.



    இதனை தொடர்ந்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் 

    திரைப்படத்துறையினர் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்தினை டிஜிட்டல் முறையில் க்யூப் மூலமாக வெளியிடுவதில் செலவுத்தொகை அதிகமாக இருக்கிறது என்பதனை வலியுறுத்தி தமிழகம் மட்டுமல்லது, ஆந்திரா,கேரளா, தெலுங்கா, கர்நாடகம்  உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதே பிரச்சினை இருந்தது, அங்கு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.ஆனால் தமிகழத்தில் உடன்பாடு ஏற்படவில்லை, இதில் அரசுக்கும் திரைப்படத்துறைக்கும் பிரச்சினையில்லை, 


    திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, திரையரங்குகள் திறக்கப்பட்டன.படத்தினை வெளியிடுவதில் பிரச்சினை இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். முதல்வரின கவனத்திற்கு சென்று தயாரிப்பாளர்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினை அமைத்து பேச்சு வார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கைப்படும், அரசு சில கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது, தேவைப்பட்டால், திரைப்படத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும், அதன் மூலமாக நிரந்தரமாக  அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும், தயாரிப்பாளர்கள் சங்க பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை, பேரணி வாபஸ் வாங்கி விட்டார். தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது விஷால் மட்டும் கிடையாது என்றார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad