Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில்;இயற்கை உணவை உண்ண வலியுறுத்தி விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி


    கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் சாலையில் உள்ள  கிராண்ட் கிட்ஸ் பள்ளியில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் இணைந்து, கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ளவும், வெப்பு நோய்கள் பரவாமல் தடுகக்வும், இயற்கை உணவை உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு யோகா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் அமுதவள்ளி தலைமை வகித்தார். வக்கீல் முருகானந்தம் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி வரவேற்றார். ஆசிரியை வனிதா மெர்சி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியை டாக்டர் கலையரசி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியை கார்த்திகா பவானி, மாணவர்கள் ரிதன்யன், பிரஹலாத், ருத்ரகேஷ், பூவரசன், ஹரிந்த்ரா மற்றும் தியா ஆகியோர் டம்ளர்கள் மீது அமர்ந்து இயற்கை உணவு உண்ண வலியுறுத்திய பதாகைகளை ஏந்தி பத்மாசனம், யோகமுத்ரா ஆசனம் ஆகியவற்றை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வணிகர் சங்க மண்டல செயலாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad