• சற்று முன்

    கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சியினர் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 34பேர் கைது !


    காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்; அன்புராஜ்,குபேந்திர பாண்டியன், செல்லத்துரை ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் நின்ற கோவை செல்லும் பயணிகள் ரெயிலையும், கோவில்பட்டி ரெயில்வே நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்த திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலையும் மறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து டி.எஸ்.பி.ஜெபராஜ் தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad