Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் வழக்கறிஞர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி – ஒருவர் கைது – கார் பறிமுதல்


    கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார். வழக்கறிஞரான இவர் கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சங்க செயலாளராக உள்ளார். இன்று காலையில் நீதிமன்ற வளாகத்தில் மகேந்திரகுமார், மற்றொரு வழக்கறிஞர் அருண்குமார் ஆகியோர் நடந்து சென்ற போது, அவர் பின்னால் வேகமாக வந்த ஆம்னி வேன் மகேந்திரகுமார் மீது மோதியது, இதில் நிலைகுலைந்த போன மகேந்திரகுமார் கீழே விழுந்து  விட, அவரை காரில் இருந்த நபர் அரிவாளல் வெட்ட முயன்றுள்ளார்.இதனை பார்த்த அருண்குமார், அங்கிருந்த காவல்துறையினர், இந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பிடித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் மகேந்திரகுமார் சகோதிரி வனிதாவின் முன்னாள் கணவர் விஜயக்குமார் என்பது தெரியவந்தது, தூத்துக்குடி காரப்பேட்டைய சேர்ந்த விஜயக்குமாருக்கு, வனிதாவிற்கு குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். 


    இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வனிதாவிற்கு ஆதவராக நீதிமன்றத்தில் ஆஜராகவது மட்டுமின்றி, அவருக்கு ஆதவரவாக இருக்கின்றார் என்ற ஆத்திரத்தில் மகேந்திரகுமாரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அருண்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த வழக்கறிஞர்கள் மகேந்திரக்குமார், அருண்குமார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விஜயக்குமாரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் வழக்கறிஞர் மகேந்திரக்குமார் கொலை செய்ய முயன்றவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடுமையா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தினை புறக்கணித்து வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற அடுத்தடுத்த இந்த சம்பங்களால் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad