கோவில்பட்டி அருகே காவல் நிலையம் முற்றுக்கை
கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோலி விளையாடிகொண்டு இருந்த கருப்பசாமி, சண்முகராஜ், கார்த்திக் ஆகியோரை நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்டெனி திலிபன் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள் மீது கடுமையாக தாக்கிய காவல்துறை உதவியாளர் ஆண்டெனி திலிபன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அக்கிராமத்தினை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டி.எஸ்.பி.ஜெபராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை